-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

சினிமாக்காரர்கள் பின்னாடி ஏன் தமிழ்நாடு தொங்கிக் கொண்டிருக்கிறது?

தமிழ் நாட்டின் மக்களின் மனநிலை வருடக்கணக்காக இப்படி சினிமாக்காரர்கள் பின்னாடியே தொங்கி கொண்டிருக்கிறது?. எம்.ஜி. இராமச்சந்திரன் தொடங்கி, கருணாநிதி, ஜெயலலிதா என அரசியல் நாற்காலியை சினிமா துறையினரிடம் விட்டுவிட்டு கீழ் நின்று பார்ப்பதே நமக்கு பழக்கப்பட்டு விட்டது போல தான் தோன்றுகிறது.
தேர்தலின் போது வாக்கு சேகரிக்க சினிமா துறையில் உள்ள நடிகைகள், நடிகர்கள், காமெடியன்கள், என பலரை கூப்பிட்டு அரசியல் கட்சி கூட்டங்களில் பேச வைத்து மக்களை தங்கள் கட்சி பக்கம் ஈர்க்க அரசியல்வாதிகள் கையாளும் முறைக்கு காரணமும் மக்களின் இந்த மயங்கிய மனநிலையே. திரையில் ரசிக்கும் கதாநாயகர்கள் நிஜத்தில் கதாநாயகர்கள் ஆக முடியுமா?. அங்கே இயக்குனர்கள் இருப்பார்கள் அவர்களை இயக்க. மேக்கப் கலைஞர்கள் இருப்பார்கள் முகத்தை அழகாக காட்ட. வசனகர்த்தா இருப்பர் அவர் பேசும் வசனங்களை எழுதி தர. இப்படியான ஒரு மாய தோற்றத்துக்கு தான் நாம் ரசிகர்கள். நிஜம் வேறு நிழல் வேறு அல்லவா. அந்த காமெராவின் வெளிச்சத்தில் தெரியும் நிழல்கள் அவர்கள். அந்த நிழல் மனிதர்கள் நிஜத்தில்   நம் தேச இருளுக்கு ஒளி ஏற்றுவார்கள்  என ஏன் நாம் அவர்களை தேடிக் கொண்டிருக்கிறோம்.



வருகைக்காக ஏங்கும் ரசிகர்கள் 

அவர் வருவாரா வந்திடுவாரா. சே அரசியலில் இறங்கிவிட்டேன்னு முழுமையாக ஒரு வரியை சொல்லி விட மாட்டாரா என ஏங்கிக் கொண்டிருக்கும் உச்ச நட்சத்திரனின் ரசிகர்கள் ஒரு பக்கம். அவர் 2.0 என்று அவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க ரசிகர் கூட்டம் என்ற பெயரில் இவர்கள் அவர் பின்னாடி போகும் இயந்திர ரசிகர்களாய் அவர் சிக்னலுக்காக காத்திருக்கிறார்கள்.



அடுத்தவர் இறங்கிவிட்டேன் என்று சொல்லி விட்டார். உடனே ஆண்டவரே ஆண்டவரே என்று கொண்டாட தொடங்கி விட்டனர். அவரே கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர். அவரை இவர்கள் ஆண்டவரே என்று கொண்டாடுகின்றனர். லாஜிக் இல்லாத ரசிப்புத்தனம் தான் இதற்கு எல்லாமே காரணம். தலையில் வைத்து கரகம் ஆடுகிறார்கள். மெர்சல் வசனம் தீயாய் பறந்தது என்றதும் அப்படியே அவர் பின் மெர்சலாக காத்திருக்கிறது இன்னொரு ரசிகர் கூட்டம்.



நல்லவர்கள் பின் செல்வோம் 

நல்லது செய்பவர்களின் பின்னால் மக்கள் போவது தப்பில்லை. ஆனா நல்லா நடிக்கிறவங்க பின்னாடி போய் நிக்கிறது தான் இடிக்கிறது. ரசனையை திரையரங்கு முதல் டிக்கெட்டோடும் தொலைக்காட்சியோடும் போஸ்டேரோடும் வைத்துக்கொள்வோம். ஏன் அரசியல் வரை வர்களை தர தர என இழுத்துக் கொண்டு போய் ஆட்சி நாற்காலி வரை உட்கார வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.


நம்மில் ஒருவரே தலைவர்

நல்லது செய்கிறவர்கள் நம்ம பக்கத்தில கூட இருப்பாங்க. அவங்க நம்ம பக்கத்துக்கு வீட்டுக்காரங்களா இருக்கலாம். நம்ம பக்கத்துக்கு தெருவில் இருக்கிற வாத்தியாராக இருக்கலாம். நம் ஊருக்காக பலன் எதிர்பார்க்காமல் வேலை செய்யும் ஒரு ஊர் பெரியவராக இருக்கலாம். நம்முடைய வார்டை நல்லா சீர்படுத்திய ஒரு கவுன்சிலராக இருக்கலாம். சேவை செய்வதையே தொழிலாக வைத்துக் கொண்டு வாழும் ஒரு நல்ல ஜீவனாக இருக்கலாம். யாருக்காவாது ஒன்று என்றால் ஓடி வரும் குணமும், தப்பை தட்டி கேட்கும் தைரியமும், அடுத்தவனுக்காக வாழும் மனசு உள்ளவனாகவும் நம்மை சுற்றி நல்லவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அண்ணாந்து பார்ப்பதை விடுவோம்  

அவர்களிலிருந்து தலைவனை தேட தொடங்கலாமே. அப்படிப்பட்ட ஒருவன் ஒருவேளை உனக்குள் இருந்தால் நீ கூட நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம் இது தான். எப்போதும் தூரத்து நட்சத்திரங்களை அண்ணாந்து பார்ப்பதை விட்டுட்டு இப்படிப்பட்ட சின்ன சின்ன மனிதர்களை தேடும் தேடலும் அவர்களை அடையாளம் கண்டு தூக்கி விடும் தோள்கள் தான் நாளைக்கு தொடர்கதையாகி நீளும் தமிழக அரசியல் வரலாற்றில் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும். இல்லாவிடில், அரசியல் மேடைகளில் அதே கதை தான் ஒவ்வொரு ஐந்து வருஷமும் .. மைக் டெஸ்டிங் .. போன ஆட்சி சரி இல்ல நாங்க வந்தா எல்லாம் சரி பண்ணிடுவோம்.. தீய்ந்து போன பழைய ரெகார்ட் சத்தம் மட்டுமே தொடர்ந்து ஒலிக்கும்.


 தொடர்புடைய செய்திகள்

மக்களே! உங்களின் குரலுக்கு உருவம் கொடுக்கும் தலைவன் யார்?


புதிய ஜனநாயகம் படைக்க அழைக்கிறேன்

  

ஜனநாயகத்தில் சட்டபூர்வ மாற்றம் தேவை


மக்கள் பணிக்கு முன்னின்று  அழைக்கிறேன் என்னோடு தோளோடு தோள் கொடுத்து மக்கள் பணியாற்ற வாருங்களென்று ...

உங்களில் ஒருவனாய்
உற்ற  தோழனாய்
முன் வரிசையில் நின்று போராட்டத்தில்
உங்கள் ஜெயசெல்வன் 
9677464889

DO You Need Web Site?