ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 9578761657- தமிழ் உலகம்

தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

ஜனநாயகத்தில் சட்டபூர்வ மாற்றம் தேவை

மாண்பும் இறையாண்மையும் கொண்டிருக்கும் நம் இந்தியத் திரு
நாட்டின் மனிதர்களே! நம் நாட்டில் என்றாவது ஒருநாள் நமக்கு விடிவுகாலம் வந்து விடாதா நாமெல்லாம் நன்றாக வாழும் நாள் எப்போது வருமென காத்திருந்து காத்திருந்து பூத்துப்போன கோடானுகோடி மனிதர்களில் ஒருவனாய் நின்று பலகோடி மக்களின் மனசாட்ச்சியாய் பேசுகிறேன்


மனிதம் என்ற வார்த்தை உயிர்  வாழ வேண்டுமென்றால் அழகாய் சொல்லலாம் மனிதர்களின் மனங்கள் மாறவேண்டுமென்று! அனைவரும் சிறப்பானவர்களாக இருப்பின் சட்டமுமும் அரசும் ஏன் தேவைப்படப் போகிறது  அட சாதாரண மக்களை விடுங்கள் குடி (அரசன்) எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பது சான்றோர் வாக்கு. ஆனால் அரசுக்கும் தலைமைப் பதவிகளுக்கும் வருபவர்கள் அன்பானவர்களாக இல்லாவிட்டாலும்  அரக்க குணம் இல்லாமல் இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது . வெள்ளையர்களிடமிருந்து பல கொள்ளையர்களின் கைக்கு மாறிவிட்ட நாட்டைக் காப்பாற்ற ஒட்டுமொத்த இளைஞர்களின் சக்தி தேவைப்படுகிறது. 

இளைஞர்களே சற்று சிந்தியங்கள் உங்களுக்கு தேவை தெருச்சுத்தம்  மட்டுமா இல்லை ஊழலை ஒழித்து பொருளாதார சமநிலையை உருவாக்கி ஒரே நாடு! ஒரே மக்கள்! பஞ்சம் பசியற்ற உண்மையான ஜனநாயக சுத்தமா முடிவெடுங்கள் மக்களே!

பணத்தினை புதிதாக மாற்றினால் பசியும் பட்டினியும் போய்விடுமா?  நடிகர்களை சந்தித்தால் நாடெல்லாம் விவசாயம் செழிக்குமா?  நாடு நாடாக பறப்பதெல்லாம் சிறுதொழில்களை வளர்க்கவா? மக்களே தயவு செய்து வாக்குகளை விற்று உங்களுக்கு நீங்களே  வாய்க்கரிசி போட்டுக் கொள்ளாதீர்கள் 

ஜாதி, மதம், திசை, மாநிலம், இனம், மொழி என பிரித்து என்றைக்கும் யாரும் ஒன்று சேராமல் வைத்திருக்கிறார்கள். 100  பேர் நன்றாக வாழ 150  கோடிப் பேர்  உழைக்கும் உன்னத நாடு நம் நாடு.

சக மனிதர்களை பற்றி சிந்திக்கும் சம கால சமூகத்தின் பெரு மதிப்பிட்குரிய மக்களே கண்டிப்பாக ஒரு மாற்றம் தேவைப்படுகிறது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பீர்கள்   நமது நாட்டின் அரசியல் அமைப்பில், சட்டங்களில் அதிகார மையங்களில் என அனைத்திலும் சட்டபூர்வ மாற்றம் தேவை ஜனநாயக சுத்தம் தேவை அதற்கு மக்கள் ஒன்று பட வேண்டும் 

ஊழலை ஒழிக்க, ஜாதிகளை அழிக்க, இனங்களை அங்கீகரிக்க, கல்வியை இலவசமாக்க அனைவருக்கும் வீடளிக்க , பஞ்சம் பசி போக்க பொருளாதாரம் சமமாய் பங்கிடப்பட அதிகாரம் மக்களிடம் பகிர்ந்தளிக்கப்பட மக்களே உண்மையான ஜனநாயகத்தின் கதாநாயகர்களாக  மாற, அரசாங்கம் மக்களின் வேலைக்கார எந்திரமாய் மாற வெளி நாடுகளின் கொள்ளையை நிறுத்தி உள்நாட்டுக் கொள்ளையை துரத்தி தேசியமயத்தை நாட்டின் அச்சாணியாய் சுழலச்செய்து ஜனநாயகத்தின் உயரிய மாண்புகளை, புதிய பரிமாணங்களை,  வெளிப்பட வைக்க  மக்களே! உங்களின் கைகளை இணையுங்கள் கொள்கைகளை உயர்த்துங்கள் அறவழிப்  போராட்டங்களை நடத்துங்கள்.

விவேகானந்தர் சொன்னார் 100 இளைஞர்களைக் கொண்டு இந்தியாவை மாற்றிக்காட்டுகிறேன் என்று! பரிதவிக்கும் இந்திய மக்களே 150 கோடி மக்களும் ஒன்றுசேர்த்தால்தான் மக்களுக்காக  உழைக்கும்....... மக்கள் ஜனநாயக அரசை நிறுவ முடியுமென்பதை நெஞ்சினில் நெருஞ்சி முள்ளாய் நிறுத்துங்கள் குறிஞ்சி மலராய் மக்களுக்கான ஆட்சி அமையும்.

இந்த கருத்துக்களை ஆமோதிப்பவர்கள் தங்களின் வலைத்தளங்களிலும் Facebook -கிலும் பகிரவும்.

ஜனநாயக ரீதியில் எங்களோடு இணைந்து பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் Cell: 7373630788

நாடு போற்றும் நல்லாட்சி அமைப்பதட்கான பணியில்
என்றும் மக்களின் தொண்டனாக
ஜெயசெல்வன் 
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search