-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

நீளமான முடி வளர்ச்சிக்கு....

எந்தப் பொருளையும் ஆரோக்கியமாக அழகாக பராமரிக்க வேண்டும் என்றால் நீங்கள் சிரத்தை எடுத்துக்கொள்வது அவசியம். அழகை பராமரிக்க என்றால் எல்லாரும் சருமத்தை மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால் கவனிக்க
மறந்துவிடுகிற ஓன்று தலைமுடி. தலைமுடியில் ஏதேனும் பிரச்சனை ஏற்ப்பட்டால், மாற்றங்கள் ஏற்ப்பட்டால் மட்டுமே தலைமுடியை கவனிக்கிறோம். நிறைய வேலைகள் இழுக்கும் என்றே பலரும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறோம். அதோடு அதிக செலவாகுமே என்ற பயமும் இருக்கும். இனி அந்தக் கவலை எதுவும் தேவையில்லை. வீட்டிலிருக்கும் ஒரு பொருளைக்கொண்டு தலைமுடியை எளிதாக பராமரிக்கலாம். பால், எல்லார் வீடுகளிலும் இருக்கும். இந்தப் பாலைக்கொண்டு உங்களின் தலைமுடியை எளிதாக பராமரிக்க சில குறிப்புகள்.

பால் : 

பாலில் இரண்டு விதமான ப்ரோட்டீன் Protein இருக்கிறது. வே (whey) மற்றும் கேசின் (caesin) இவை உங்கள் தலைமுடிக்க மிகுந்த ஆரோக்கியத்தை கொடுத்திடும். ப்ரோட்டீன் குறைவான உணவுகளை எடுத்துக் கொண்டால் உங்கள் தலைமுடி வலுவிலக்கும். உங்களது ஆரோக்கியத்தை பொறுத்தே தலைமுடியின் ஆரோக்கியமும் இருக்கும் என்பதால் நேரடியாக தலைமுடிக்கு ஊட்டச்சத்து ஏற்ற வேண்டும் என்று நினைக்காமல், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள ஆரம்பியுங்கள்.



வலு : 

தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணம், போதிய ஊட்டச்சத்து இன்றி தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவிழப்பது தான். இதனை தவிர்க்க முட்டை, தேன் Honey மற்றும் சிறிதளவு பால் சேர்த்து தலையில் ஹேர் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். இது தலையின் வேர்கால்களை வலுப்படுத்தும்.

முடி வளர்ச்சி : 

முடியை உதிராமல் தடுத்தால் மட்டும் போதாது, புதிய முடியையின் வளர்ச்சியும் நமக்கு அவசியம். பாலில் அதிகப்படியான க்ளுடமைன் எனப்படுகின்ற ஒரு வகையான அமினோ அமிலம் இருக்கிறது. இது முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

ஸ்ட்ரைட்னிங் : 

பாலைக் கொண்டு முடியை ஸ்ட்ரையிட்னிங் செய்ய முடியும். முக்கால் கப் பாலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். சாதாரண பால் பயன்படுத்தலாம், அல்லது தேங்காய் பால் பயன்படுத்தினால் இன்னும் சீக்கிரமாக பலன் கிடைக்கும். தலை முழுவதும் அந்தப் பாலை ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.

மசாஜ் (Massage):

முடியின் எல்லா பகுதிகளிலும் பால் சேருமாறு ஸ்ப்ரே Spray செய்து தலைக்கு மசாஜ் செய்திடுங்கள். பாலுக்கு பதிலாக பால் பவுடரையும் Milk Powder ஹேர்பேக்காக Hairpack போட பயன்படுத்தலாம். ஒரு மணி நேரம் காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் நன்றாக அலசிடுங்கள். ஷாம்பு Shampoo போட்டு தலைக்குளித்தால் பால் வாசனை வராது.

DO You Need Web Site?